கம்பளை மகாவலி கங்கையில் காணாமல் போன பெண் – 8 நாட்களின் பின்னர் சடலம் மீட்பு

கம்பளை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகாவலி கங்கையில் காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி, கம்பளை பகுதியில் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு நிலவிய வேளையில், கம்பளை பாலம் அருகே இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பெண் ஆற்றில் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, இன்று கம்பளை போத்தலாப்பிட்டி ‘களு பாலம்’ பகுதிக்கு அருகில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸாரும், குற்றப்புலனாய்வு தடயவியல் பொலிஸ் அதிகாரிகளும் (SOCO) இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles