இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து -8 பேர் படுகாயம்

அனுராதபுரத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் – பாதெனிய பிரதான வீதியின் ஆலங்குளம் பகுதியில் நேற்று (27 ) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில், 4 வயது குழந்தை மற்றும் 38 வயதான கார் சாரதி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருநாகல் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த காரின் சாரதி உறங்கியதால் கார் வீதியை விட்டு விலகி அனுராதபுரத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரு கார்களில் சிக்கி காயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் மீட்டு அனுராதபுரதம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles