“மலையகத்தை அழித்து வரும் மதுபானசாலையை அமைக்க இடம் தர மாட்டோம்”-டயகம நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

டயகம நகரில் மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று முற்பகல்  ஈடுபட்டுள்ளனர்.

பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

200 வருடங்களாக மலையகத்தை அழித்து வரும் மதுபானசாலையை அமைக்க நாம் இடம் தர மாட்டோம் உட்பட பல்வேறு கோசங்களை ஏந்திய பதாதைகளை சுமந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டயகம 3ஆம் பிரிவிலிருந்து ஆரம்பித்து டயகம் 2ஆம் பிரிவிற்கு அதாவது புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலை வரை நடை பவணியாக வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் மூன்று மதுபானசாலைகள் இருக்கின்ற நிலையில் டயகம நகரில் மதுபானசாலைகள் எதற்கு?

பிரதேச இளைஞர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சிறிய நகரமான டயகம நகரத்தில் ஒரு வங்கி வசதியோ, ஒரு சதொச நிலையமோ, எரிபொருள் நிலையமோ இல்லாதுள்ள நிலையில் மதுபான சாலைகள் அமைக்க காரணம் என்ன? கொழும்பில் இருந்து எமது பெற்றோருக்கும் பணம் அனுப்பினால் அதனை அவர்கள் பெறுவதற்காக 200 ரூபா அளவில் செலவிட்டு அக்கரபத்தனை நகருக்கே செல்ல வேண்டும்.

இவ்வாறான சில அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியாத அரசியல்வாதிகள் மதுபான சாலையை அமைக்க திட்டமிட்டிருப்பது ஏனோ!.. 200 வருடகாலமாக மலையகம் மதுபானத்தினால் அழிந்து போதும் இனியும் வேண்டாம் இந்த நிலை.

மதுபான நிலையத்தை அமைத்துக்கொடுத்து எம்மிடம் வாக்கு பெற வேண்டும் என நினைப்பது முட்டாள் தனம்.

 – கௌசல்யா –

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles