நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்ற பஸ் புசல்லாவையில் விபத்து – 8 பேர் காயம்!

புத்தளத்திலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற சொகுசு பஸ்ஸொன்று கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் எல்பொட பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

22 பேர் பயணித்த மேற்படி சொகுசு பஸ், இன்று (10) பகல் மண் திட்டில் மோதி – பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன் போது காயமடைந்த 8 பேரில் நான்குபேர் கொத்மலை பிரதேச வைத்தியசாலையிலும் ஏனையோர புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles