இறம்பொடை ஆர். பி. டிவிசன் மக்களை தோட்டத்திலிருந்து ஒருபோதும் வெளியேற்ற முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.
அத்துடன், குறித்த தோட்டத்துக்கு விசேட அதிரடிப்படையினர் (STF) சென்றனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் STF பிரதானி மற்றும் கொத்மலை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை தொடர்புகொண்டு மனோ கணேசன் வினவியுள்ளார்.
இதன்போது ஆர்.பி. டிவிசன் மக்களின் தொழிற்சங்க நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் தலையிடவில்லை எனவும், அவர்களுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை எனவும், தோட்டத்தில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை இடம்பெறுகின்றதா என்பதை கண்காணிக்கவே சென்றிருந்தனர் எனவும் மனோ கணேசன் எம்.பியிடம் எஸ்.டி.எப். பிரதானி கூறியுள்ளார்.
அத்துடன், அத்தோட்ட மக்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு விசேட அதிரடிப்படையினராலோ அல்லது பொலிஸாராலோ எவ்வித பாதிப்பும் வராது என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
