நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட ரயில் சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த ரயில் சுமார் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவையைப் பொறுத்து இந்தச் சேவை தொடரலாம் என்றும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு நோக்கிச் செல்லும் ரயிலில் 10 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் தொலைக்காட்சி வசதிகளுடன் இருக்கும். 4 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படும்.

ரயில்வே இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்யலாம். பயணிகளுக்கு உணவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles