அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பில் உள்ள அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் வட்டரெக பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நீண்டகாலமாக மன நோய்க்கு ஆளான குறித்த நோயாளி, தீவிரமடைந்த நோய் நிலைமை காரணமாக கடந்த 20ஆம் திகதி அங்கொட மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், கடந்த 25ஆம் திகதி அதிகாலை வேளையில் குளியலறையில், வழுக்கி விழுந்த சந்தர்ப்பத்தில், தலையில் அடிப்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குறித்த நோயாளியின் சடலம் முத்திரையிடப்பட்ட நிலையில், உறவினர்களிடம் வழங்கப்பட்டதன் காரணமாக உறவினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் முல்லேரியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த வைத்தியசாலையின் விசேட சட்டவைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆயுதங்களினால் தாக்கப்பட்டமையால், ஏற்பட்ட பல தாக்க நிலைமைகள் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலை பணியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக குறித்த நோயாளியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles