தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டை சுற்றிவளைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் இதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேரர் ஒருவர் தலைமையிலான குழுவினர் இன்று அங்கு சென்றுள்ளனர்.
