எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பங்கேற்பார் என தான் நம்புவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார்.
கட்சியால் வழங்கப்பட்ட அழைப்பிதழை முன்னாள் ஜனாதிபதி ஏற்றுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
” கட்சி மாநாட்டால் சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை. பொருளாதார பிரச்சினையைக் கருத்திற்கொண்டே மாநாட்டை குருணாகலையில் நடத்தாமல் கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.” எனவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
