2023 இறுதிக்குள் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை வரைவை சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நீண்டகால பாதுகாப்புக் கொள்கையின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு செயற்படும் எனவும், தேசிய கொள்கை கட்டமைப்பை ஏனைய அமைச்சுக்களும் பின்பற்றும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையின் கொள்கை கட்டமைப்புக்குள் பாரிய இடைவெளி காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுதந்திர சந்தைப் பொருளாதாரத்திற்கு தேசிய கொள்கையின்மை குறிப்பிடத்தக்க பின்னடைவாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தினால் தேசியக் கொள்கை பற்றிய அறிக்கையைப் பெறுவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேசியக் கொள்கையின் கட்டமைப்பிற்குள் அதிகாரப்பகிர்வும் நிகழலக்கூடும் என சுட்டிக்காட்டினார்.
