” நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் கெஹலிய பதவி விலக வேண்டும்”

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன்.

அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் எனவும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் இன்று 3 ஆவது நாளாகவும் நடைபெறும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றாலும், தோல்வி அடைந்தாலும் பதவி விலகுவதே சுகாதார அமைச்சர் எடுக்கும் சரியான தீர்மானமாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles