எதிர்க்கட்சி தலைவர் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங்கிற்கும் (Julie J.Chung) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் ஐக்கிய அமெரிக்கா தூதரகத்தின் அரசியல் விவகார அதிகாரி
மேத்யூ ஹின்சனும்(Matthew Hinson) கலந்து கொண்டார்.

தற்போதைய இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இரு தரப்பினரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது விளக்கமளித்தார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி திட்டமிட்ட திகதியில் நடத்த திட்டமிட்டிருந்த தேர்தலை ஒத்திவைத்தல்,மக்களை அடக்கி கொண்டுவர முயற்சி செய்து வரும் பல்வேறு சட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேராவும் கலந்து கொண்டிருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles