தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நீதி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

” நாட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. மக்கள் மனம் அறிந்துதான் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மீளப்பெறும் திட்டம் இல்லை.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

சிஸ்டம் சேஞ்ச் பற்றி கதைக்கின்றனர், ஆனால் அதனை ஏற்படுத்த முற்படுகையில் எட்டி உதைக்கின்றனர் எனவும் பிரதான எதிர்க்கட்சிமீது அவர் விசனம் வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்ற விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“ தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை நானே முன்வைத்தேன், அதற்கான பொறுப்பை ஏற்கின்றேன். அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை முன்வைத்தபோதும், தேர்தல் செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை முன்வைத்தபோதும் அதன் வெளிப்படைதன்மை பற்றி கேள்வி எழுப்பட்டது. சவால்களும் இருந்தன. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை முன்வைத்தபோதும் இதே நிலைமை காணப்பட்டது. ஆனால் அவை மூன்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

1978 அரசமைப்பிலேயே தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த முறைமையின்கீழ் 1989 இல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதன்பின்னர் 1994 இல் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்போது ஊழல், மோசடிகளுக்கு வழிவகுக்கும் இந்த தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படும் என்ற உறுதிமொழியை சந்திரிக்கா அம்மையார் வழங்கினார். அந்த உறுதிமொழியை வழங்கியதால்தான் அவருக்கு 62 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

2001 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசும், தேர்தல் முறைமை மாற்றம் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டது. இதன்பிரகாரம்தான் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டு, அதன் தலைமைப்பதவி அப்போது எதிரணியில் இருந்த தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட்டது. 12 ஆண்டுகளாக இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி, அனைவருக்கும் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்புகளை வழங்கி, அறிக்கை முன்வைத்தார்.

மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டபோது, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் நிறேவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும் எனக் கூறினோம். அதனை செய்தோம். அதேபோல தற்போதுள்ள தேர்தல் முறைம மாற்றப்படும் எனவும், தினேஷ் குணவர்தனவின் அறிக்கை அதற்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தோம். இந்த அறிக்கையின் பிரகாரம் பிரதமரால் (நல்லாட்சியில்) அமைச்சரவை பத்திரமொன்றும் முன்வைக்கப்பட்டு அதற்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. எனினும், தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். அவர் அவ்வாறு செய்திருக்காவிட்டால் புதிய முறைமையின்கீழ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றிருக்கும்.

தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமையின்கீழ் 89 இல் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து தரப்புகளும் அது மறுசீரமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கின. ஊழல் மோசடி மிக்க இந்த முறைமையால் பண பலம் படைத்தவர்கள்தான் நாடாளுமன்றம் வர முடியும், புத்திஜீவிகளுக்கு இடமில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், மக்களும் மாற்றத்தை கோருகின்றனர், எமது நாட்டு மக்கள் முட்டாளர்கள் அல்லர், இது விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் தனது பொறுப்பை நிறைவேற்றுகின்றதா என அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நாம் முற்படவில்லை. செய்யக்கூடிய விடயங்களை மட்டுமே செய்வோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles