அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலையும், அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் மாகாண சபை தேர்தலையும் நடத்த தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.










