ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது…!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இலங்கையரான அனுலா ரத்னாயக்கவின் சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

அனுலா ரத்னாயக்கவின் உறவினர்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் சடலத்தை பொறுப்பேற்க கட்டுநாயக்க விமான நிலையம் வந்திருந்தனர்.

மரண பரிசோதனைக்காக சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. பரிசோதனைகள் முடிவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

இஸ்ரேலுக்குள் ஊருவிரு ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தினர். இதன்போது அனுலா ரத்னாயக்கவும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles