பசறை – லுணுகலை பிரதேசத்தில் 17 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வர்த்தக கட்டிட வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14) காலை 10.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் லுணுகலை பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயவீர அபயகோன், ச்சம்பிகா, லோகேஸ்வரன் உள்ளிட்ட பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்களின்றி கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்புதிய வர்த்தக கட்டிட வளாகத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில், லுணுகலை பிரதேச மக்களின் வர்த்தக மற்றும் பொருளாதார தேவைகள் மேலும் பூர்த்தியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.










