சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழப்பு! 198 குடும்பங்கள் இடம்பெயர்வு!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 127 குடும்பங்களைச் சேர்ந்த 517 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

பதுளையில் இரு யுவதிகளும், பேராதனையில் நபரொருவரும் மண்சரிவால் உயிரிழந்துள்ளனர். களுத்துறையில் சிறுவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

198 குடும்பங்களைச் சேர்ந்த 662 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Related Articles

Latest Articles