சீரற்ற காலநிலையால் 5,318 பேர் பாதிப்பு! 4 பேர் உயிரிழப்பு – 118 வீடுகள் சேதம்!!

நுவரெலியா, பதுளை உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 419 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

4 வீடுகள் முழுமையாகவும், 114 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 430 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 562 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles