ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதுவராக கோபால் பாக்லே நியமனம்!

இலங்கைக்கான இந்திய தூதுவராக செயற்பட்ட கோபால் பாக்லே, ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் அவர் ஆற்றி வந்த பணிகளில் இருந்து கடந்த 15 ஆம் திகதியுடன் அவர் விலகினார்.

தூதுவர் கோபால் பாக்லே 2020 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக தமது கடமைகளை பொறுப்பேற்று கடந்த இரண்டரை வருடங்களாக அந்த பதவியில் தொடர்ந்தார்.

இந்த காலப்பகுதியில் இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரியாக செயல்பட்ட அவர் இருநாட்டு கூட்டுறவில் பல ஒப்பிடமுடியாத மைல்கற்களை அடைய செயல்பட்டிருந்தார்.

இந்தியா-இலங்கை உறவுகளில் பல மகுட சாதனைகளை நிகழ்த்துவதில் முக்கிய பங்காற்றியவராக உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இருந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

2022 இல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பல்நோக்கு உதவியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே முக்கிய பங்கை வகித்திருந்தார்.

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள், ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள், திரவ மருத்துவகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதிலும் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சிறப்பான பணியை ஆற்றியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இந்த காலகட்டத்தில் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துவதற்காக இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் உதவிகளும் கிடைக்கப்பெற்றது. இதனை ஒருங்கிணைத்தில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே முக்கிய பங்கை வகித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஈடுபாடுகள் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் பதவிக்காலத்தில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles