பெருந்தோட்டங்களில் 42.3 வீதமானோர் கடனாளிகளாகியுள்ளனர்

” நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும.” என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசணையை இல்லாது செய்வது தொடர்பில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

” அதிகாரமோகம் காரணமாக பல்வேறு சதித்திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் தற்போது நம்பி வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது.வாழ்க்கைச்செலவு அதிகரித்து மக்கள் தள்ளாடி வருகின்றனர். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் நாட்டில் 30 லட்சத்து 29 ஆயிரத்து 300 குடும்பங்கள் கடனாளி ஆகியுள்ளன.

இதில் 6 லட்சதது 97 ஆயிரத்தி 300 குடும்பங்கள் தங்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கே கடன் பெற்றுள்ளன. இது பாரதூரமான விடயமாகும்.

அத்துடன் வாங்கிய கடனை மீள செலுத்துவதற்காக 3 லட்சம் குடும்பங்கள் மீண்டும் கடன்பெற்றுள்ளதாக குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 9 லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்கள் அடமான முறையில் கடன்பெற்றுள்ளன. வங்கிகளில் 97ஆயிரம் குடும்பங்களும் நிதி நிறுவனங்களில் 2 இலட்சத்து 72 ஆயிரதது 500 குடும்பங்களும் பண தரகர்களிடமிருந்து 3 லட்சத்து 3, 500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் நகர் புறங்களில் சுமார் 24,3 சதவீதமானவர்கள் கடனாளியாகி உள்ள நிலையில் பெருந்தோட்டங்களில் அது 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர்.

பெருந்தோட்டங்களில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமையே இதற்கு காரணமாகும். அத்துடன் கடனாளியாகி உள்ளது மாத்திரமல்லாது பெருந்தோட்டங்களில் மந்தபோசணை, வறுமை, போஷாக்கின்மை என்பன அதிகரித்து காணப்படுகிறது. நாட்டுக்காக உழைத்த மலையக பெருந்தோட்ட மக்கள் இன்று கடனாளியாக மாறியுள்ளார்கள் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles