இழுபறியில் “வெற்றிலை” – களத்துக்கு வருகிறது “கதிரை”!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தின்கீழ் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துவருகின்றது.
இது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தை பெறுவதில் மைத்திரி தரப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேற்படி கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக தெரிவுசெய்யப்பட்ட திலங்க சுமதிபால மைத்திர தரப்புடன் முரண்பட்டுள்ளார்.

அத்துடன், தயாசிறி ஜயசேகரவும் மைத்திரி தரப்புடன் அரசியல் சமரில் ஈடுபட்டுவருகின்றார்.

இந்நிலையிலேயே கதிரை சின்னத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணியின் தலைமைப்பதவியை சந்திரிக்காவுக்கு வழங்குவதற்கான பேச்சுகளும் இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Latest Articles