இலங்கை தொழில்முனைவோரை வலுப்படுத்திய கனடா சர்வதேச வர்த்தகக் கண்காட்சியும் மாநாடும்!

கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு 7 ஜெட்வின் ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையில் உள்ள கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனம் மற்றும் சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பு ஆகியன ஒன்றிணைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அம்ரி நிசாம் மற்றும் வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திர குமார், சர்வதேச வர்த்தக இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர் வர்த்தகப் பேரவையின் ஆளுநர் கலாநிதி சிந்தியா சாங் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இங்கு கருத்து தெரிவித்த சர்வதேச வர்த்தக இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் எமது அமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக பாரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த சிறந்த ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம். வாய்ப்பை இதனூடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்தவும் முடியும். திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாகவே நாட்டின் பொருளாதார துரித வளர்ச்சியடையும் என்பதுடன் இலங்கையிலுள்ள முன்னணி வர்த்தகர்கள் போட்டி கொடுக்க சந்தைக்கு முகம் கூடியதாகவும் இருக்கும் என்றார்.

இந்நிகழ்வுக்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் சிறு தொழில் முனைவர்கள் தந்திருந்ததுடன், தமது உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகம் செய்தமை விசேட அம்சமாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles