13 குறித்து இந்தியா கப்சிப் – வியப்பில் அநுர!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய தரப்பில் எதுவும் பேசப்பாடமை எமக்கு வியப்பாக இருந்தது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் குழு டில்லி சென்றிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தியினர் சந்திப்புகளை நடத்தினர்.

அமுல் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கும் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டனர். இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேளர மாநிலத்துக்கும் சென்றிருந்தனர்.

இந்திய விஜயத்தின் பின்னர் அவ்விஜயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் முதன்முறையாக ஊடகமொன்றுக்கு நேற்று முன்தினம் நேர்காணல் வழங்கி இருந்தார்.

இதன்போது – இந்தியாவில் நடைபெற்ற சந்திப்புகளின்போது மாகாணசபை முறைமை மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசப்படவில்லையா என எழுப்பட்ட கேள்விக்கு,

“ உண்மையில் இது குறித்து அவதானமே செலுத்தப்படவில்லை. இது பற்றி பேசப்படாமை எமக்கும் வியப்பாக இருந்தது. எனினும், ஒரேயொரு சந்தர்ப்பத்தின்போது தமிழ், முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெற உள்ள உங்களிடம் வேலைத்திட்டம் என்னவென்று குழுவொன்றினால் எம்மிடம் கேட்கப்பட்டது. அதற்கு நாம் பதில் வழங்கினோம்.

2005இல் தமிழர்களுக்கு எதிராகவே மஹிந்த ஆட்சிக்கு வந்தார். தமிழர்கள் தோற்றுவிட்டனர் எனக்கூறி 2010 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2019 இல் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். மற்றைய தரப்புக்கு எதிராகவும், அவர்களுக்கு வலியை ஏற்படுத்தியுமே ஆட்சிக்கு வருகின்றனர்.

நாம் இந்த அணுகுமுறையை பின்பற்றும் கட்சி அல்ல. அனைவரையும் இணைத்துக்கொண்டு இந்த ஆட்சியை விரட்டவே எதிர்பார்க்கின்றோம். எமது ஆட்சில் வடக்க, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்களும் எமது அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில்தான் செயற்பட்டுவருகின்றோம். அவர்களின் வழி பிரித்தாள்வது. எமது வழி இணைந்து பயணிப்பது எனக் கூறினோம்.” – என்று அநுரகுமார திஸாநாயக்க பதலளித்தார்.

அத்துடன், வடக்கில் உள்ள கட்சிகளுடன் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டாதா என்ற வினாவுக்கு , பதிலளித்த அநுரகுமார திஸாநாயக்க “ அவ்வாறு எந்தவொரு பேச்சும் இடம்பெறவில்லை. இராஜதந்திர ரீதியில் அது ஏற்புடைய காரணியும் அல்ல” – என்று குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles