தொலஸ்பாகை தமிழ் வித்தியாலய மேம்பாட்டுக்காக பழைய மாணவர்களின் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி

கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட க/ கம்/ தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்தின் (K/GP/Dolosbage Tamil Vidyalayam) உட்கட்டமைப்பு மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இப்பாடசாலையில் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (O/L) வரை பயின்று வெளியேறிய பழைய மாணவர்களின் கூட்டு ஏற்பாட்டில் இப்போட்டி பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது.

இச்சுற்றுப்போட்டியில் பாடசாலையின் பழைய மாணவர்கள் மாத்திரமே அணிகளாகப் பங்குபற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு விபரங்கள்:

இடம்: கங்க இஹல கோரளை பிரதேச சபை விளையாட்டு மைதானம், குருத்துவத்தை

திகதி: 30.05.2026 (சனிக்கிழமை)

நேரம்: காலை 8.00 மணி முதல்

இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதியானது, முழுமையாக தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்தின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நீக்கி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி வசதிகளை உயர்த்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளது.

தங்கள் கல்விச் சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பழைய மாணவர்கள் முன்னெடுத்துள்ள இந்த உன்னத முயற்சிக்கு ஆதரவளிக்கும் முகமாக, பாடசாலையின் ஏனைய பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிராந்திய நலன்விரும்பிகள் என அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு:
இப்போட்டி மற்றும் நிதியுதவிகள் தொடர்பான விபரங்களுக்கு பின்வரும் ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புகொள்ளலாம்:

என். அகிலனன் – 077-7145091

ரமேஸ்ராஜா – 076-7807071

பெ. சந்திரமோகன் – 077-1475569

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles