ஆட்டோவை மோதித் தள்ளியது கார் – இருவர் படுகாயம் (படங்கள்)
சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் ஆட்டோவொன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று குறித்த ஆட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் ஆட்டோவில் பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை...
‘டொலர் நெருக்கடி’ – மூன்று வெளிநாட்டு தூதுரகங்களை மூடுகிறது அரசு
வெளிநாடுகளிலுள்ள மூன்று இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி நைஜீரியாவிலுள்ள இலங்கை தூதரமும், ஜெர்மனியிலுள்ள பிரேங்பர்ட் மற்றும் சைப்பிரஸிலுள்ள இலங்கை கன்சியூலர் அலுவலகங்கள் ஆகியன மூடப்படவுள்ளன.
சேவையின் தேவை மற்றும் செலவீனங்களை கருத்திற்கொண்டு...
பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம் (படங்கள்)
சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான...
பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து சுகாதார பரிசோதகர்கள் அதிருப்தி!
பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமையானது ஏதாவது அழுத்தங்களுக்கு அடி பணிந்தா என்பது தொடர்பில் சந்தேகம் எழுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 341 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 341 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 546,839 ஆக அதிகரித்துள்ளது.
‘இராணுவத்தை முழுமையாக நம்புகின்றோம்’ – ஆளுங்கட்சி எம்.பி.
" எமது அரசு இராணுவத்தை நம்புகின்றது. எதிர்காலத்திலும் இராணுவத்தின் ஒத்துழைப்பு பெறப்படும். அதேபோல குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முற்படும் எதிரணிக்கு அதற்கான வாய்ப்பை வழங்கமாட்டோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...
‘மக்கள் எதிர்ப்பு – யாழில் காணி சுவீகரிப்பு நிறுத்தம்’
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்றையதிம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான...
‘லிட்ரோ’, ‘லாப்’ கேஸ் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த கட்டளை!
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தால் அனுமதி வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை மட்டும் சந்தைப்படுத்துமாறு 'லிட்ரோ', மற்றும் 'லாப்' கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், உரிய தரம் இல்லாமல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள...
மனோ அணியின் ஆதரவுடன் ஐதேகவின் பட்ஜட் நிறைவேற்றம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் மேலதிக 79 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 90 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும்...
வேலைக்காக வெளிநாடு செல்வோர் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு!
2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் - என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் , கொவிட் தொற்யைடுத்து...










