3ஆவது அலைக்கு எதிர்க்கட்சிகளா பொறுப்புகூற வேண்டும்?
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் தோல்விகண்டுள்ள ராஜபக்ச அரசு, தனது இயலாமையை மூடிமறைக்கவே வைரஸ் பரவலுக்கு எதிரணிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே காரணம் என அறிவிப்பு விடுத்துவருகின்றது." - என்று ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியது.
ஐக்கிய...
‘தனிமைப்படுத்தல் சட்டம், ஊரடங்கைமீறிய மேலும் 186 பேர் கைது’
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 186 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 842 பேர்...
‘லிட்ரோ கேஸின்’ விலை அதிகரிக்கப்படாது – அமைச்சர் பந்துல உறுதி
'லிட்ரோ' சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
லாப்...
5000 ரூபா ‘அவுட்’ – 2000 ரூபாவே நிவாரணக் கொடுப்பனவு!
தனிமைப்படுத்தல் ஊரங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 2 ஆயிரம் ரூபா நிவாரண் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மற்றும் 2ஆது அலைகளின்போது நாடு முடக்கப்பட்டவேளைகளில் நிவாரணக் கொடுப்பனவாக...
‘ 1000 ரூபாவுக்காக ஆயிரம் அடக்குமுறைகள் – தொழில் சுமையும் அதிகரிப்பு’
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் அதனை பெற்றுக்கொள்வதற்கு தினமும் பல போராட்டங்களில் ஈடுபட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின்...
கொரோனாவால் 5 நாட்களுக்குள் 889 பேர் பலி – 17,940 பேருக்கு தொற்று!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 5 நாட்களில் 889 பேர் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி 15 ஆம் திகதி 167 பேரும், 16 ஆம்...
நிழல் உலக தாதா ‘பொட்ட’ நௌபருக்கும் கொரோனா தொற்று!
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதா பொட்ட நௌபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட...
‘எதிரணியால்தான் நாடு முடக்கம் – நிவாரணம் இல்லை என அரசு சொல்லக்கூடாது’
“ நாட்டை முடக்கினால்தான் மரண பொறிக்குள் இருந்து மக்களை மீட்கலாம் என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது. சுகாதார துறையினர், சர்வமதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த கோரிக்கையையே விடுத்துவருகின்றனர்.
ஆனால் இக்கட்டான சூழ்நிலையில்கூட...
நாட்டில் நேற்று 3,839 பேருக்கு கொரோனா – 195 பேர் உயிரிழப்பு!
கொரோனாவால் வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆண்களும், 97 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில்...
30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றல்!
" இனிவரும் நாட்களில் இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடிவைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராக வேண்டும்." - என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், 30...



