குடு ரொசான் கைது!
போதைப்பொருள் கடத்தல்காரரான மட்டக்குளிய “குடு ரொசான்” என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சீனாவின் அபிவிருத்தி சாதனையை பாராட்டுகிறார் சஜித்!
“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப்...
லிபியாவின் ராணுவத் தலைவர் உட்பட 7 பேர் விமான விபத்தில் பலி!
துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை மற்றும் அமெரிக்கா,...
இலங்கைக்கான இந்திய ஆதரவ தொடர வேண்டும்: சஜித் கோரிக்கை!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (23) கொழும்பிலுள்ள 'இந்திய இல்லத்தில்' நடைபெற்றது.
இதன்போது, இலங்கையில் 'டிட்வா' சூறாவளியினால்...
ஆஸ்திரேலியா செல்கிறார் இஸ்ரேல் ஜனாதிபதி!
இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா வருகின்றார்.
ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து...
மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுங்கள்: தமிழ்த் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து நடத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தும்படி ஒரே குரலில்...
மரக்கறி விலைப்பட்டியல் (24.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கொழும்பு மாநகர சபையையும் என்பிபியே ஆளும்: அடுத்த முறை பட்ஜட் நிறைவேறும்!
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் அடுத்த முறை நிறைவேறும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பு மாநகரசபை முடிவானது முழு நாட்டுக்கும் தாக்கம் செலுத்தப்போவதில்லை எனவும் அவர்...
என்.பி.பி. அரசின் ஜனநாயக விரோத செயலுக்கு கொழும்பு மாநகரசபையில் முடிவு கட்டியுள்ளோம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலுக்கு கொழும்பு மாநகரசபையில் முடிவு கட்டப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கூட்டு எதிரணியாகவே இந்த வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது...













