முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் தனிப்பட்ட பிணையில் விடுதலை
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் 10 மில்லியன் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நம்பிக்கையை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலவச உணவு வழங்க தீர்மானம்?
உணவற்றவோருக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்த தீர்மானம் முன்னெடுத்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே குறித்த விடயத்தை பிரதமர் தெரிவித்தார்.
யூரியா உர கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்
பெரும் போக செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, 2022/23 பெரும் போக...
மூன்று வாரங்களில் எரிபொருளுக்கும் எரிவாயுக்கும் நெருக்கடி நிலவும் சாத்தியம்- பிரதமர்
எதிர்வரும் மூன்று வாரங்களில் எரிபொருளுக்கும் எரிவாயுக்கும் நெருக்கடி நிலவும் சாத்தியம் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த காலப் பகுதியில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர்...
மீண்டும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடூழிய சிறை தண்டனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாட்டில் இன்று 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சடுதியாக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள்
அத்தியாவசிய பொருட்களுக்கு மேலதிகமாக சந்தைகளில் தற்போது, மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
இதன்படி, பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில் ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு...
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் அறிவிப்பு
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (07) கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய நகரங்களில் மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் விநியோகஸ்தர்களின் விபரங்களை...
எரிவாயு விலை அதிகரிப்பு: லாஃப்ஸ் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எதனடிப்படையில் விலை அதிகரிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு...
பல்வேறு துறைகளில் தொழிலை இழக்கும் அபாயம்
பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் தொழிலை இழக்கும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதுமானளவு வருமானம் இல்லாமை...












