அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அதிரடி அறிவிப்பு!
எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றில் தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த பதவிவிலகுகின்றார்?சற்று முன்னர் வெளியான முக்கிய தகவல்.
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச அடுத்த சில மணிநேரங்களில் பதவி விலகுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகவுள்ளார்.
நாட்டில் இடைக்கால அரசாங்கம்-ஜனாதிபதி வழங்கிய பதில்?
நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு...
‘மக்கள் ஆசியுடன் ஆட்சியைக் கவிழ்ப்போம்’ -சஜித் சூளுரை
" டீல் அரசியலுக்கு இடமில்லை, மக்கள் ஆசியுடன்தான் ஆட்சியைக் கவிழ்ப்போம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட...
‘சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும்’
சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எவ்வித மதிப்பீடும் செய்யாமல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியமையும் மனித...
ஊரடங்குக்கு மத்தியில் ஜே.வி.பியும் போராட்டம் (படங்கள்)
மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராக ஜே.வி.பியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமொன்று இன்று மஹரகமையில் நடைபெற்றது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள் என பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.
நாட்டில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதையும்மீறி...
‘அமைச்சு பதவிகளை துறக்க ராஜபக்சக்கள் முடிவு’ – சிங்கள ஊடகம் தகவல்
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூவர் அமைச்சு பதவிகளை துறக்கவுள்ளனர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச...
12 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை...
மின்வெட்டை நிறுத்தக்கோரி போராடியவர் மின்சாரம் தாக்கி பலி
கொழும்பு, நுகேகொடை மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்வெட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி மின்மாற்றியில் ஏறியபோது, மின்சாரம்...
சகல சமூக வலைத்தளங்களும் வழமைக்கு!
முடக்கப்பட்டுள்ள சகல சமூக வலைத்தளங்களும் இன்று பிற்பகல் 3.30க்கு வழமைக்கு கொண்டுவரப்படும் என தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
நேற்றிரவு முதல் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது