கொவிட் தொற்றிலிருந்து 10,001 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10,001 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,119 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகளை இருபதுக்கு20 தொடரின்...
அசாத் சாலியின் மனு தொடர்பில் மார்ச் 23 இல் நீதிமன்றம் தீர்மானம்
தனக்கு எதிராக சாட்சியமளித்தவர்களிடம் நட்டஈடு கோரி மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என...
‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக இன்னும் கையெழுத்து வேட்டை’
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் இன்று காலை இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து...
‘எரிபொருள் விலை அதிகரித்தால் பஸ் கட்டணமும் எகிறும்’
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரித்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருள் நிவாரணம்வழங்கப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் ஒன்றிணைந்து போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை...
‘அரசியிலிருந்து வெளியேறமாட்டோம்’ நிமல் சிறிபாலடி சில்வா
அரசிலிருந்து வெளியேறும் எந்த எண்ணமும் கிடையாது. ஜனாதிபதியும் பிரதமரும் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க நாம் உருவாக்கிய அரசாங்கத்தோடு புதிய பயணத்தை தொடருவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால...
சிரேஷ்ட ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி காலமானார்!
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (PCCSL) ஆகியவற்றில் பணியாற்றிய ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி இன்று காலமானார்.
அவர் 'யுக்திய' மற்றும் 'லக்பிம' பத்திரிகைகளில் ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார். இலங்கை...
‘மாகாண தேர்தலுக்கு தயாராகுங்கள்’ – மொட்டு கட்சி மேல் மட்டத்திலிருந்து உத்தரவு
மாகாணசபைத் தேர்தலக்கு தயாராகவே இருக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சி மேல் மட்டத்தால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்பதால் தற்போதில் இருந்தே ஏற்பாட்டு பணிகளை ஆரம்பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன்,...
தாதியர் சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது!
அகில இலங்கை தாதியர் சங்கத்தினரால் இன்று (21) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளருடன் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து பேரணியை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்...
உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – ஜோ பைடன் இணக்கம்
உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க கொள்கை அடிப்படையிலான உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.












