கெப்பத்திகொல்லாவயில் மக்கள் கொந்தளிப்பு – பொலிஸ் சார்ஜன் உயிரிழப்பு! நால்வர் கைது!!
அநுராதபுரம், கெப்பத்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் மதவாச்சி...
இந்த அரசை மக்கள் நம்புகின்றனரா? ஆய்வில் வெளியான முடிவு!
"நாடு நினைக்கும் விதம்" என்ற தலைப்பின்கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில், ஒக்டோபர் மாத முடிவின் பிரகாரம், தற்போதைய அரசுமீது 10 சதவீத மக்களே நம்பிக்கை வைத்துள்ளனர். இதில் அரசின் செயற்பாடுகள்...
” சிதறு தேங்காய்போல் சிதறிவிட்டது மொட்டு கட்சி” – கம்மன்பில தகவல்
" அரசியல் செய்ய முடியாததால் பஸில் ராஜபக்ச தனது தாய்நாடு நோக்கி பறந்துவிட்டார். இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சிதறு தேங்காய் உடைப்பதுபோல சிதறியுள்ளது." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய...
நடைமுறை சாத்தியமான, சமமான வரிவிதிப்பு முறையை வலியுறுத்தும் ரவி கருணாநாயக்க
இலங்கையின் நிலையான வளர்ச்சித் திட்டத்தை நோக்கிய செயற்பாட்டுக்காக, நடைமுறை சாத்தியமானதும், எட்டக்கூடியதும், நியாயமானதும், சமமானதுமான வரி விதிப்பு முறைக்கு ஆதரவாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக...
பணவீக்கத்தில் ஓரளவு சரிவு
கொழும்பு, நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரகாரம் ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 69.8% ஆக பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான...
யாழில் இரு இளைஞர்கள்மீது வாள்வெட்டு – சூரன்போரின்போது பயங்கரம்!
சூரன் போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை கிழக்கு, சித்தங்கேணியைச் சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்...
எரிபொருள் விலையில் மாற்றம்?
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு அல்லது நாளைய தினம் எரிபொருளுக்கான விலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
ஒவ்வொரு மாதத்திலும் முதலாம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில்...
கவிதை எழுதி முற்போக்கு கூட்டணியை கலாய்க்கிறார் திலகர்
தமிழ் முற்போக்கு கூட்டணியை மறைமுகமாக கலாய்த்துள்ளார் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக அரசியல் அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ்.
தமது முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் ஹெக்கூ பாணியில் கவிதையும் எழுதியுள்ளார்.
"கட்டி முடிக்கப்பட்டது...
அதிரடியாக சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர்
நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் புலனாய்வுப்...
தொற்றா நோய்களால் நாட்டில் 83 வீத மரணங்கள் – சுகாதார அமைச்சு
நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் உயிரிழப்பதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த...












