மின் கட்டணத்தில் விரைவில் திருத்தம்!
அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவோரின் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்காக அமைச்சரவை மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக...
தேயிலை உற்பத்தி வீழ்ச்சி – 73 மில்லியன் டொலர் வருமானம் இழப்பு!
2022 முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் 73 மில்லியன் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது என தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்கத்தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடையின் விளைவாகவே இந்நிலைமை...
பதவி விலகமாட்டேன் – ஜனாதிபதி கோட்டா திட்டவட்டம்!
“புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்தார்.
அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறினார் என்று வெளிவிவகார...
21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் மொட்டு கட்சிக்குள் முறுகல்!
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும்...
’21’ ஐ அனுபவிக்கும் அதிகாரம் ரணிலுக்கு இல்லை!
" உத்தேச 21 ஆம் திருத்தத்தில் வழங்கப்படும் அதிகாரங்களை அனுபவிக்கும் உரிமை தற்போதைய பிரதமருக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ இல்லை. எனவே ஓராண்டு காலத்திற்குள் மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும்,...
இந்த அரசை ஏற்க முடியாது – தேர்தல் வேண்டும்! கூட்டமைப்பு வலியுறுத்து!!
" தற்போதைய அரசாங்கத்தை புதிய அரசாங்கம் என நான் கூறப் போவதில்லை. இது புதிய அரசாங்கம் இல்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு அரசாங்கம் அமைக்கப்படவேண்டும்." என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்...
கோழிப்பண்ணைகளுக்கு மூடுவிழா! முட்டை விலை மேலும் எகிறும்!!
நாட்டில் கோழி முட்டை நுகர்வு 80 சதவீதத்தால் குறைந்துள்ளமையால் எதிர்காலத்தில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என நுகர்வு கோழி முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை உற்பத்தி செலவு 35 சதவீதம் உயர்ந்துள்ளது, தற்போது...
‘பொருளாதார நெருக்கடியை ரணிலால் வெற்றிகொள்ள முடியும்’ – அமெரிக்கா நம்பிக்கை!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ,சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (27) சந்தித்து பேச்சு நடத்தினார்.
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிகாலம் நிறைவு!
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே...
பொருளாதார மாநாட்டை நடத்த ரணில் திட்டம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளித்து, அரசியல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்துவருகின்றார்.
இதன்படி உலக நாடுகளின் ஒத்துழைப்பு...













