கொவிட் தொற்றிலிருந்து மேலும் 406 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 406 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொவிட் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528,806 ஆக உயர்வடைந்துள்ளது.
ஆபத்திலிருந்து தப்ப இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எரிவாயு விபத்துக்கள் இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இதனால் மின்சார...
பேலியகொடை மெனிங் சந்தை பழ விற்பனையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்
பேலியகொடை மெனிங் சந்தை கட்டடத் தொகுதியில் மரக்கறி வர்த்தகர்கள் பழ விற்பனையில் ஈடுபடுவதன் காரணமாக அங்குள்ள பழ விற்பனை வியாபாரிகள் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பேலியகொடை மெனிங் சந்தையின் முதலாம் மாடி கடைத் தொகுதிகள் மரக்கறி...
பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை…
போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...
‘ஐ.நா. எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படும்’
ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி (Khaled Khiari)...
அமெரிக்க ஜனநாயக மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு இல்லை!
அடுத்த மாதம் நடத்த இருக்கின்ற உலகளாவிய "ஜனநாயகத்துக்கான மாநாட்டுக்கு" (Summit for Democracy) அழைக்கப்படவுள்ள நாடுகளின் பட்டியலை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கிறது.
சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இலங்கையின் பெயரையும் அந்தப்பட்டியலில் காணவில்லை....
‘யுகதனவி’க்கு எதிரான மனுக்கள் – விசாரணைக்கு ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம்!
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின்...
சஹ்ரானை கைது செய்ய தயாரான அதிகாரிகள் கைதானது ஏன், உளவு பிரிவு அறிக்கைக்கு என்ன நடந்தது?
" சஹ்ரானை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்த அதிகாரிகள் திடீரென கைது செய்யப்பட்டது ஏன்? நாமல் குமார என்பவரின் வருகையின் பின்னணி என்ன? அரச உளவு சேவை பிரதானி எதற்காக அறிக்கைகள் மறைத்தார்,...
ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிருப்தியில்!
அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுங்கட்சியிலுள்ள மூத்த அரசியல்வாதிகள் சிலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். சாதகமான பல வழிமுறைகள் இருந்தும், மீண்டும் - மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கும் விதத்தில் அரச மேல் மட்டம் முடிவுகளை எடுப்பதாலும்,...
பரீட்சைத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




