சிறைக்கைதிகள் இடையே கொவிட் கொத்தணி
பதுளை சிறைச்சாலையில் 12 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
95 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த...
வரவு செலவுத் திட்டத்தில் அரச அதிகாரிகள் புறக்கணிப்பு-தொழிற்சங்க ஒன்றியங்களின் கூட்டமைப்பு சிவப்பு எச்சரிக்கை
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச அதிகாரிகளை புறக்கணித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஎதிர்வரும் 29ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா அரச...
குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்கள்
கடந்த இரண்டு வருடகால ஆட்சிக் காலத்தில், சவால்களுக்கு மத்தியில் குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
நாடு பூராகவும் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பாரிய வேலைத்திட்டங்களுக்காகப்...
இலங்கையில் அமுலாகும் புதிய நடைமுறை
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை அமுல் செய்யப்படவுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15,000 அமெரிக்க டொலர் காப்புறுதி வழங்கும் நடைமுறையை கட்டாயமாக்கும் சட்டம்...
நீர் கட்டணம் அதிகரிப்பு?
அடுத்தாண்டு வரை நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செலவினம்,...
நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – சுகாதாரப் பிரிவு
நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதவிர, மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சந்தேகித்தாலோ...
நனோ திரவ உரத்தின் விலையைக் குறைக்க முடியாது – உள்நாட்டு முகவர் நிறுவனம்
இறக்குமதி செய்யப்படுகின்ற நனோ உரத்தின் விலையைக் குறைக்க முடியாதெனக் குறித்த உரத்தை நாட்டுக்குக் கொண்டு வரும் உள்நாட்டு முகவர் நிறுவனமான யுனைட் ஃபாமர்ஸ் ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 5.25 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு...
‘கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை கருவி’
கீழ் கடுகண்ணாவ பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள தொடருந்து பாதையிலும் தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிக்கு அருகில் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கான...
உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு – சபைகளின் பதவி காலம் நீடிப்பு
உள்ளாட்சி சபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.
340 உள்ளாட்சி மன்றங்களில், 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 275 பிரதேச சபைகள் ஆகியவற்றின் பதவி காலமே,...
‘திறைசேரிக்கு அறிவிக்காமல் செய்யப்பட்டுள்ள செலவுகள்’
திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவிக்காமல் நான்கு திட்டங்கள் நேரடி வெளிநாட்டு நிதியுதவிகள் செலவுசெய்யப்பட்டமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
2017, 2018, 2019 நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை...




