ஐந்து மாவட்டங்களுக்கு நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு?
சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டால், அன்றைய தினம் முதல் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நான்கைந்து நாட்களுக்கு...
கோழி இறைச்சியின் விலை குறைந்தது
கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக மக்கள் படை களமிறங்க வேண்டும் – துமிந்த சம்பத் அழைப்பு
ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்காகவே தமது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் போது பொது மக்களுக்கும் தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின்...
தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 4ஆம் திகதி (04.08.2023) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்திய தூதுவரின் அழைப்பின் பிரகாரம் நடைபெறும் இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு...
திருவிழாவின்போது தாலிக்கொடி கொள்ளை – ஐவர் கைது!
யாழ்ப்பாணம், நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.
நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது தண்ணீர் பந்தலில் பானங்கள்...
சமையல் எரிவாயு ஏற்றி வந்த கனரக வாகனத்தால் நுவரெலியாவில் போக்குவரத்து ஸ்தம்பிதம்
நுவரெலியா நகருக்கு 'லாப்' சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த கனரக வாகனம், இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்த நிலையில் - முன்னோக்கி நகர முடியாமல் நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில நின்றுள்ளது....
எரிபொருள் விலை அதிகரித்தாலும் முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றமில்லை
ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் மேற்கொள்ளும் எரிபொருள் விலை திருத்தங்களுக்கு அமைவாக முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை...
வவுனியா இரட்டைக்கொலை – 5 பேர் கைது!
வவுனியா, தோணிக்கல்லில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடெரிப்பு தாக்குதலால் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்தின் பின்னர் 5 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு...
’13’ குறித்து முடிவெடுக்க இரு வாரங்கள் கெடு!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு வார...
வட்டவளையில் பஸ் விபத்து – பலர் காயம்
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இபோச பஸ்ஸொன்று வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளானதில் 18 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வட்டவளை சிங்கள பாடசாலை அருகில் வைத்தே இன்று அதிகாலை சுமார் 15 அடி பள்ளத்தில்...







