மைத்திரிக்கு பளார்….பளார்! சந்திரிக்கா அதிரடி!!
" ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு முன்னின்று செயற்படுவேன்." - என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்...
துபாய்க்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் டிசம்பர் முதல் அதிகரிக்கின்றன
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதி முதல் துபாய்க்கும் இலங்கைக்கும் இடையில் மேலதிக விமானங்களை சேவையிலீடுபடுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
விமானப் பயணச்சீட்டுக்கான கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது..
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில்...
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கின்றது சதொச
லங்கா சதொச நிறுவனம் 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளை (24) முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் புதிய...
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!
அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு டிசம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர்...
6 மணிநேர நீர் விநியோகத்தடை
கட்டுகஸ்தோட்டை பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24ஆம் திகதி மு.ப. 8 மணி முதல் பி.ப. 2 மணி வரையிலான 6 மணிநேர நீர்...
விரைவில் கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாக உள்ளன.
இது இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
தற்போது பெறுபேறுகள் இறுதிக்கட்டத்தில்...
திடீர் தீ விபத்தில் லயன் தொடர் குடியிருப்பு சேதம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தின் அப்பர்கிரான்லி பிரிவிலுள்ள தோட்ட லயன் தொடர் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் குடியிருப்பிலிருந்த அனைத்து பொருட்களும்...
15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்- இருவர் கைது
15 வயதான பாடசாலை மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 44 வயதுடைய நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொம்பே பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது இதொகா – ஜீவன் இரங்கல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குடும்பம் ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது. இந்த இழப்பு காங்கிரஸிற்கு மட்டுமல்ல. மலையக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட...
ஜனாதிபதியுடன் இ.தொ.கா நாளை பேச்சு
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை ஜனாதிபதியுடன் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்பி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேற்படி கடந்துரையாடலில்அனைத்து மலையக அரசியல் பிரதிநிதிகளும்...










