சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்தவாரம் ஆரம்பம்
அடுத்த வாரம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 5 இலட்சம் அட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த...
இலங்கையைச் சேர்ந்த 12 பேருக்குச் சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு எதிராகச் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்தார்.
அவர்களில் சிலர்...
முப்படையினருக்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு
சட்டரீதியில் விலகாமல் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய 2022. 11. 15ஆம் திகதி முதல் 2022. 12....
தேசிய பாடசாலைகளுக்கு பதிலாக கொத்தணி பாடசாலைகள் முறை
முழு சமூகத்தையும் பிளவுபடுத்தும் தேசிய பாடசாலைக் கருத்திட்டத்துக்குப் பதிலாக, புவியியல் அமைவிடம் மற்றும் மாணவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு முன்னணி பாடசாலைகளுடன் கூடிய பாடசாலைக் கொத்தணிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி...
ஹற்றன் பகுதிகளில் மருந்து தட்டுப்பாடு
ஹற்றன் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ள தனியார் மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டிக்கோயா, கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்களுக்கு, அங்கு தேவையான மருந்துகள் இன்மையால் வைத்தியர்கள்...
பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்ற இளைஞர் கைது
பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்த 21 வயது இளைஞரை உல்லந்துபிட்டிய பிரதேசத்தில் சுமார் 400 போதை வில்லைகளுடன் கடந்த 25 ஆம் திகதி கைது செய்ததாக அலதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக...
அமெரிக்க சபாநாயகரின் கணவன்மீது கத்திக்குத்து தாக்குதல்!
வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு,...
இலங்கை, நியூசிலாந்து இன்று மோதல்!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள்...
‘நாங்கள் விழவில்லை – இன்னமும் நாட்டை ஆள்கிறோம்’ – மஹிந்த
“ நாட்டை இப்போதும் நாம்தான் ஆட்சி செய்கின்றோம். எமது கட்சிதான் இப்போதும் நாட்டை ஆள்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எமது பக்கமே நின்று பணியாற்றுகின்றார்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலமும், 31 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 29 மற்றும் 30...











