‘நாங்கள் விழவில்லை – இன்னமும் நாட்டை ஆள்கிறோம்’ – மஹிந்த

“ நாட்டை இப்போதும் நாம்தான் ஆட்சி செய்கின்றோம். எமது கட்சிதான் இப்போதும் நாட்டை ஆள்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எமது பக்கமே நின்று பணியாற்றுகின்றார்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டை உலுக்கிய கொரோனாப் பெருந்தொற்றே பிரதான காரணம். இதைப் புரிந்தும் புரியாதவர்கள்போல் எம் மீது சிலர் வசைபாடி புலம்பித் திரிகின்றார்கள்.

நாடு வங்குரோத்து அடைந்தமைக்குக் கோட்டாபய ராஜபக்சவோ அல்லது ராஜபக்சக்களோ காரணம் அல்லர்.

ராஜபக்சக்கள் வீழ்ந்துவிடவில்லை. அவர்கள் பதவிகளிலிருந்து விலகி நின்று அரசை வழிநடத்துகின்றார்கள் என்பதே உண்மை.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்குத் தலைமை தாங்கக்கூடிய – வல்லமை பொருந்திய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

அவரும் நாங்களும் இணைந்து நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்போம். இதற்குக் கட்சி, பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles