தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் 15ம் திகதி முதல் ஆரம்பம்
இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில்...
15 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது
சுமார் 15 கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியின்றிய வர்த்த வளாகமொன்றின் ஊழியர் ஒருவரே இவ்வாறு...
‘மே 9’ வன்முறைச் சம்பவம்: மேலும் 11 பேர் கைது!
இவ்வருடம் மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தத் தகவலை...
டலஸ் அணி வெளியேற்றம் – மொட்டு கட்சியின் நிலைப்பாடு வெளியானது
" டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 13 எம்.பிக்கள் வெளியேறியிருந்தாலும், அதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது." - என்று நாடாளுமன்ற எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன...
‘பயங்கரவாத தடைச்சட்டம்’ – பிரதமர் வழங்கியுள்ள உறுதிமொழி
" கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது, சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது." - என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
ஐ.எஸ். போதைப்பொருளுடன் கம்பளை பகுதியில் ஒருவர் கைது!
கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை அலுகொல்ல பிரதேசத்தில், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தொலஸ்பாகை அலுகொல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைபொருள் வைத்திருந்த 29 வயதான சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது...
ஆளுங்கட்சியின் முக்கிய கூட்டம் இன்று மாலை!
ஆளுங்கட்சியின், கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் மாலை 4.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த...
சேகுவேராவின் மகன் காலமானார்!
சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா இன்று வெனிசூலாவில் காலமானதை கியூபா அதிபர் உறுதி செய்துள்ளார்.
சேகுவேரா பொலிவியாவில் தனது 40வது வயதில் (1967இல்) சுட்டுக் கொல்லப்பட்டவேளை கமிலோவுக்கு ஐந்து வயதாக இருந்தது. கமிலோவும் தொடர்ச்சியாக...
மொட்டு கட்சியின் கைதியாக ஜனாதிபதி! ஹர்ஷ
" பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவந்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது அதே சட்டத்தை கையில் எடுத்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இதன் தாக்கம் ஜெனிவா தொடரில் எதிரொலிக்கும்."
இவ்வாறு ஐக்கிய...
மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை பலி
நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குற்பட்ட தம்மன்னாவெட்டிய கிராமத்தில் காட்டு யானையொன்று நேற்று (30) அதிகாலை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.
இந்தக் காட்டு யானை கிராமத்திலேயே பல நாட்களாக அங்குமிங்கும் சுற்றித்திரிந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இக்காட்டு...









