பின்னவல மிருக காட்சிச்சாலை ‘இரவு சபாரி பூங்கா’ ஆகிறது
பின்னவல மிருகக்காட்சிச்சாலைக்கு இரவு சபாரி பூங்கா என பெயரிட தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
காட்சிசாலையை பார்வையிடுவதற்கு மாலை 5 மணி வரை மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது.
இதனால் சுற்றுலா பயணிகள்...
அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு – இளம் பெண் உயிரிழப்பு
கொழும்பு – வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறான காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதாவது, கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட...
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்கு சிங்கப்பூர் பிரதமருக்கு அழைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று...
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு
தற்போது டீசல் மற்றும் எரிபொருள் போதுமான அளவு கையிருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் மேலும்,
இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்...
அடுத்த நெருக்கடி – மின்வெட்டு அமுலாகும் நேரம் மேலும் அதிகரிப்பு
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளதால் மின்வெட்டு அமுலாகும் காலம் மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி புதிய மின்வெட்டு அட்டவணை...
காட்டு யானை தாக்கி இருவர் பலி!
எப்பாவல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
எப்பாவல கெலேகம மற்றும் ரொட்டவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
58 மற்றும் 64 வயதான இருவரே...
பேக்கரிகளுக்கு மூடுவிழா – பலர் தொழில் இழப்பு!
கோதுமை மா, முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வினால் நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன...
வானுயர கோபுரம் அமைத்து என்ன பயன்? மக்களோ பட்டினியில்! பேராயர் சீற்றம்
" வானுயர கோபுரம் அமைக்கப்பட்ட நாட்டில், பட்டினியால் பிள்ளைகள் மயங்கி விழுகின்றனர். முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளால் உலகம் முழுதும் கையேந்த வேண்டிய நிலையில் நாடு உள்ளது. எனவே, ஆட்சியாளர்களுக்கு பதிலளிப்பதற்கு உரிய நேரத்தில்...
கழிவுத் தேயிலைத்தூள் உற்பத்தியால் சீர்கேடு
தேயிலை உற்பத்தியில் தரமற்ற இரசாயனப் பதார்த்தங்கள் சேர்க்கப்பட்ட கழிவுத் தேயிலைத் தூள் உற்பத்தி அதிகரித்து வருவதாக பாவனையாளர்கள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
நாட்டில் தற்போழுது நிலவுகின்ற பொருளாதார பின்னடைவு காரணமாக...
மருந்தகத்தில் கொள்ளை
பன்னிபிட்டிய பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த கொள்ளை சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.












