குளவிக்கொட்டு: எழுவர் பாதிப்பு!
பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் ஏழு தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தொழிலாளர்களே இன்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்!
நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் ஆணையைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில்...
நொண்டி குதிரையுடன் கூட்டு சேர்ந்துள்ள கண்டி கழுதை! மனோ கொதிப்பு!!
" என் தந்தையின் பிறந்த மற்றும் சொந்த ஊர் கண்டி. என் பாடசாலை கல்வியை நான் பெற்றதும் கண்டி. இந்த கண்டி மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்...
மக்களுக்கு சேவை செய்கிறோம்: துரோகம் செய்யவில்லை!
“ சம்பள விடயத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது, இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் செய்யவில்லை. எங்களது மக்களுக்காக வேலை செய்து சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம்" - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...
வேலுகுமாரின் முடிவுக்கு கண்டி மாவட்ட புத்திஜீவிகள் வரவேற்பு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டி மாவட்ட தமிழ் சிவில் பிரதிநிதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர்.
கண்டி வரலாற்றில் ஒரு தமிழராக இரு...
இன்று வேட்பு மனு தாக்கல்: 40 வேட்பாளர்கள் போட்டி!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று இடம் பெறவுள்ளது. இன்றைய தினம் (15) காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் இடம் பெறுவதுடன் 11...
பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் வெள்ளிகிழமை (16) வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள்...
நுவரெலியாவில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா லபுக்கலை குடாஒயா பகுதியிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் நேற்று (13) செவ்வாய்க்கிழமை இரவு தாய் மற்றும் மகன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த...
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பு
2ஆம் இணைப்பு
மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12.08.2024) தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை...
அரசியல் களத்தில் ஆட சஜித்துடன் டில்ஷான் இணைப்பாட்டம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்ஷான், ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சுமார்...











