ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி – சாமிமலையில் சோகம்!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மொக்கா தோட்டத்தில் மூவருக்கு பீசீர் பரிசோதனை! 17 பேர் சுய தனிமையில்

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் மிட்லோஜியன் பிரிவில் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த 17 பேர் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு (8)...

லிந்துலையில் இறந்தநிலையில் சிறுத்தைக்குட்டி மீட்பு!

0
தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டியொன்று இன்று (09/10/2020) மீட்கப்பட்டுள்ளளது. குறித்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போதே தேயிலை மலையிலிருந்து குறித்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் 15 பேர் தனிமைப்படுத்தலில்

0
மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு தம்பதியினரும், ஆண் ஒருவரும் கம்பஹாவில் உள்ள விற்பனையகம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை அடுத்து மஸ்கெலியாவில் உள்ள தமது வீட்டுக்கு...

நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

0
மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் இன்று (8) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கான தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என...

‘கொரோனா’ தாக்கம் – வெளித்தோட்டங்களில் இருந்து வந்தால் பதிவு அவசியம்!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைக்கு அமைவாக முக கவசம்  அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், கைகளைக் கழுவுதல்  போன்ற சுகாதார முறைகளை கடைபிடிக்குமாறு இ.தொ.காவின் உப...

‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்கள் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு!

0
புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று (8) தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த...

ஊவாவிலும் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

0
ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களை உடன் தடை செய்யுமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம்...

‘கொரோனா அச்சம்’ – நுவரெலியாவில் களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை!

0
கொரோனா அச்சம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் களியாட்ட நிகழ்வுகளை உடன் நிறுத்துமாறு நுவரெலியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதியே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா மாவட்டத்துக்கு உல்லாசப்பயணிகள் அதிகமாகவரும் இடங்கள்...

பாடசாலை மாணவி தற்கொலை – மஸ்கெலியாவில் சோகம்!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன சோளங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவியொருவர் இன்று (7) முற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சோளங்கந்தை தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய தனுசியா என்ற உயர் மாணவியே இவ்வாறு தற்கொலை...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...