பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத இறுதிக்குள் முன்வைக்கப்படவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்றுவருவதுடன், பல்துறைசார் பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
தேசிய...
முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஜனாதிபதிக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணைந்து கொண்டார்.
அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட குழுவினர்...
ரூ. 1700 வெளியானது வர்த்தமானி: உறுதியானது சம்பள உயர்வு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து, தொழில் ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1,700...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை கையிலெடுத்தார் ஜனாதிபதி: 12 ஆம் திகதி விசேட சந்திப்பு
தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடைபெற விருப்பதாகவும், இந்தப் பிரச்சினையை தான் நேரடியாக கையாள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினைகளைப்...
சஜித்தின் அம்மா, மனைவிகூட சஜித்துக்கு ஆதரவென செய்தி வரலாம் – கூட்டணியை விளாசி தள்ளுகிறது NPP
ஐக்கிய மக்கள் கூட்டணி உதயமானது ஊடக பிரசாரத்தை பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கை என்ற தொனியில் விமர்சித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ.
“ ஐக்கிய மக்கள் சக்தியுடன்...
தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கும் அரியநேத்திரன்
தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்க பா. அரியநேத்திரன் களமிறங்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து உருவாக்கிய தமிழர்...
நாமலே ஜனாதிபதி வேட்பாளர்: அறிவிப்பு விடுத்தது மொட்டு கட்சி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
ஆன்மீக...
ரணிலுக்கு தோள்கொடுக்க 100 எம்.பிக்கள் களத்தில்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல்...
9 தமிழ் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம்!
🛑 9 பேர் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம்
🛑 எழுவர் இன்னும் முடிவு இல்லை
🛑 தேர்தலை புறக்கணிக்குமாறு இருவர் அறைகூவல்
🛑 மொட்டு கட்சியை முழுமையாக கைவிட்ட தமிழ் எம்.பிக்கள்
தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...
வடக்கில் இருந்து ஜனாதிபதியொருவரை உருவாக்குவதே எனது இலக்கு – நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் வடக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வென்றெடுப்பது எனது இலக்காக இருக்கின்றது, அவர் ஜனாதிபதிபதவிவரை செல்ல வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் - என்று மொட்டு...













