தேர்தல் பரப்புரையாக மாறவுள்ள மே தினக் கூட்டங்கள்!
மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதற்கான களமாக பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இம்முறை...
மே முதலாம் திகதிக்குள் தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வேன் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான நாடாளுமன்ற...
ரூ.1,700 இழுபறியில்…இன்றைய சந்திப்பிலும் ஏமாற்றம்…!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டமும், எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.
இன்றைய கூட்டத்திலும் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை என்று சம்பள நிர்ணய சபைக்...
ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கை வருகை: 5 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து!
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24) இலங்கைக்குக்கு வருகைத் தரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின்...
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் – ஜனாதிபதி உறுதி
“ பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த மக்களுக்கு காணி வழங்குவதற்கான தீர்மானம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வெலிமடை அம்பகஸ்தோவ பொது விளையாட்டரங்கில் நேற்று...
தியத்தலாவை விபத்து: இருவர் கைது – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட எழுவர் பலி
2024 பொக்ஸ்ஹில் கார்பந்தயம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கை செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்த காரொன்று...
தியத்தலாவை விபத்தில் எழுவர் பலி: 21 பேர் காயம்!
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
......
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் அறுவர் பலியாகியுள்ளனர்.
இவ்விபத்தில்...
சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு வேண்டும்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உண்மையாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
ரூ. 1700 ஐ உடன் வழங்கு: பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதொகாவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்...
ரூ. 1700 ஐ வழங்கு! கொழும்பில் நாளை போராட்டம்: நுவரெலியா, பதுளையிலும் தொழிற்சங்க சமரை முன்னெடுக்க திட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கறுப்புப்பட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில், நாளை வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் இப்போராட்டம்...













