உலக நாடுகளிடம் உதவி கோருகிறார் ஜனாதிபதி!
மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து, பேச்சு நடத்தினர்.
ஜனாதிபதி மற்றும் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய...
ஜோன்ஸ்டனுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை!!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பிற்பகல் கோட்டை நீதவான் திலின கமகேவின் இல்லத்திற்கு சென்று சரணடைந்தார்.
இதன்போது, அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு...
விபத்தில் இளம் ஜோடி பலி!
கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிளொன்றும், உழவு இயந்திரமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் ஜோடி, பலியாகியுள்ளது.
இன்று காலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் , கலஹிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரசிக...
சரணடைந்தார் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலக்கெடு...
PCR, ரெபிட் அன்டிஜன் சோதனைகளும் அவசியமில்லை- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
நாளை (10) முதல் திரையிடல் சோதனையாக (Screening Test) PCR அல்லது ரெபிட் அன்டிஜன் சோதனை மேற்கொள்வது அவசியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் உட்புற மற்றும்...
மின்சாரத் திருத்தச் சட்டமூலம்- பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்
மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகக்கவசம் அணிவோருக்கான அறிவிப்பு
நாட்டில் உள்ளக மற்றும் வெளியக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து மருத்துவக்...
புறக்கோட்டை – காலி முகத்திடல் வீதி முடக்கம்..
புறக்கோட்டை – காலி முகத்திடல் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் உயிரிழப்பு
முல்லைத்தீவு – மல்லாவி, திருநகர் பகுதியில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, காயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மல்லாவி – திருநகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 12 பேர்...
‘கப்புடா’ கதையால் ஆங்கிலத்தில் கதைக்க மறுத்த பஸில்!
காகத்தை ஆங்கிலத்தில் 'கப்புடா' என விளித்து, சர்வதேச அளவில் ஹிட்டான பஸில் ராஜபக்ச, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆங்கில மொழியில் கருத்து வெளியிட மறுத்தார்.
தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...













