தப்பியது கம்மன்பிலவின் தலை – உயர்மட்டத்திலிருந்து பறந்த அவசர கட்டளை
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கூட்டணியிலுள்ள அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என அரச மேல் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அடங்கிய...
ஆட்சியைக் கவிழ்க்கவே நாட்டில் போராட்ட அலை
“ அரசின் வேலைத்திட்டங்களைக் குழப்பி ஆட்சியைக் கவிழ்க்கும் குறுகிய நோக்கத்தின் அடிப்படையிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பானதுறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில்...
ஊவாவில் 70 பாடசாலைகளை மேம்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு
பதுளை, மொனராகலை மாவட்டங்ளில் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மொழி மூலமான 70 பாடசாலைகளில் 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத்...
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இடைநிறுத்தம்
மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை நாளை (17) முதல் இடைநிறுத்தவுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.
இதன்படி நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை...
கொரோனாவால் மேலும் 23 ஆண்களும், 18 பெண்களும் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 41 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 23 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு...
தொடர் போராட்டத்துக்கு கிடைத்தது வெற்றி – ஜோசப் ஸ்டாலின் விடுவிப்பு
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட முன்னிலை சோசலிசக்...
திகாவின் சகாக்களுக்கு நெருக்கடி – பதவியை பறிக்குமா ஐ.தே.க.?
பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி சபைத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தின்கீழ் தொழிலாளர் தேசிய முன்னணி,...
கல்வியும் இராணுவ மயமாகிறதா? அரசாங்கம் மறுப்பு
இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு அரசு முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்றாக நிராகரித்துள்ளது.
அத்துடன், நாட்டிலுள்ள பல்கலைக்கழக கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன...
கம்பளை, கோணடிக்கா தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு
கம்பளை, வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணடிக்கா மேல்பிரிவு தோட்டத்திலுள்ள காட்டு பகுதியில் இருந்து சிறுத்தையொன்றின் சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளது.
3.5 அடி நீளமான குறித்த சிறுத்தை நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக்கூடும் என...
ரிஷாட்டின் வீட்டுக்கு வேலைக்கு சென்ற மலையக சிறுமி உயிரிழப்பு
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 16 வயதுடைய மலையக சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் சொந்த ஊரான டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று...



