இறம்பொடையில் குளவிக்கொட்டு: இருவர் பாதிப்பு!
இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் இரு தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கௌசல்யா.
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா? பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு
"ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாம் இன்று பயணித்துக்
கொண்டிருக்கின்றோம். அத்துடன், தமிழ்த் தேசிய பேரவையுடன் புரிந்துணர்வு ஒன்றையும் மேற்கொண்டிருக்கின்றோம். மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன்
பேசியே முடிவு எடுப்போம்."
-...
நுகேகொடை கூட்டம்: இதொகாவும் பங்கேற்காது!
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பதில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இந்த தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உறுதிப்படுத்தினார்.
மக்களின் நலன்கருதி...
சம்பள உயர்வை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்: அமைச்சர் அறிவிப்பு!
“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துவிட்டன.” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு...
பாகிஸ்தான், ஆப்கான் இடையில் சமரசம்: ஈரான் களத்தில்!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் முன்வந்துள்ளது.
பாகிஸ்தானுக்கும், அதன் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே, டி.டி.பி., எனப்படும்...
ஜே.வி.பி. செயலர் விரைவில் டில்லி பயணம்?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கிய இணையதளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரில்வின் சில்வா...
கம்பனிகளின் விளையாட்டு எங்களிடம் எடுபடாது: ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு உறுதி!
வரவு - செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஜனவரி முதல் வழங்கப்படும். கம்பனிகள் கடந்த அரசாங்கங்களுக்கு விளையாட்டுக்களை காண்பித்திருக்கலாம். ஆனால் எம்மிடம் அந்த விளையாட்டுக்கள் செல்லாது. எனவே நாம்...
யாழில் போதைப்பொருள்களுடன் 23 பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள்களுடன் ஒரே நாளில்
23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்...
2026 பாதீடு அரசியல் நாடகம்: சஜித் கடும் சீற்றம்!
"வரவு - செலவுத் திட்டம் என்ற பெயரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்களின் மூட்டையையே முன்வைத்துள்ளார். இதில் மக்களுக்கு ஏமாற்றமே நிறைந்துள்ளது."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...













