அங்கொட சந்தியில் துப்பாக்கிச் சூடு
அங்கொட சந்தியில் முல்லேரியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு தீ வைக்க முயற்சித்த கூட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ரத்கமவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் காயம்
ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு அருகில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை வீழ்த்தப்பட்டது
தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை, குழுவொன்றினால், இன்று கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் தந்தையே இவர்.
ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் நேற்று கொளுத்தப்பட்டது. டி.ஏ. ராஜபக்சவின் சமாதியும் நேற்று...
பிரதமர் பதவியை ஏற்க தயார் – சம்பிக்க ரணவக்க அதிரடி
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைதியான முறையில், கௌரவமாக பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தவறான வழியை தேர்ந்தெடுத்துவிட்டார். அதன் விளைவாகவே பேரவாவி, நந்திக்கடலாக மாறியது.”
இவ்வாறு ஐக்கிய...
அமைதியை பேணுமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை
பழிவாங்கும் நோக்கத்துடனான வன்முறைகளை நிறுத்தி, அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியலமைப்பிற்கு அமைவாக நாட்டில் மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து...
இதுவரை அழிக்கப்பட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் சொத்துகள் ( விபரம்)
ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ (கார்ல்டன் இல்லம் – வீரகெட்டிய & மெதமுலன வலவ்வ)
ராஜபக்ஸ...
நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை – நாமல்
முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ச, நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, இன்று (10) தெரிவித்தார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் நாமல்...
மூன்று தலை பாம்புபோல் உருமாறி குஞ்சு பொரிக்கும் பட்டாம் பூச்சி
சமூக வலைதளங்களில் புதிதாக ஒரு புகைப்படம் வைரலாகி உள்ளது. அதனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மூன்று தலை பாம்பு போல் இருக்கும் புகைப்படம் ஆகும்.
ஒரு சாதாரணமான ஒரு பட்டாம் பூச்சி....
குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்?
சிலர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பேசப்படுவதால், தமது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமது கடமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக...











