DocuSign உடன் இணைந்து e-signature மாதிரியை அறிமுகப்படுத்துகிறது HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, வாடிக்கையாளர்களின் அன்றாட நடவடிக்கைகளில் காகிதாதி இல்லாத பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் கையொப்ப வடிவத்தை செயல்படுத்த DocuSign உடன் கைகோர்த்துள்ளது.

HNB FINANCE ஏற்கனவே உள்ளக செயல்பாடுகளுக்காக இந்த வடிவமைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது, அங்கு வாடிக்கையாளர்கள் பாரம்பரிய எழுத்து கையொப்பங்களுக்கு பதிலாக மின்னணு கையொப்பங்களைப் பயன்படுத்த முடியும்.

“இ-கையொப்ப மாதிரியை செயல்படுத்துவது HNB FinanCEஇன் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயல்பாட்டில் ஒரு நேர்மறையான படியாகும்.

இது எங்களின் நிலையான வணிக மாதிரிக்கு ஏற்ப உள்ளது மற்றும் தற்போதைய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சமூக இடைவெளியை பராமரிக்க இந்த முறை மிகவும் பொருத்தமானது.

கார்பன் டை ஆக்சைடை வளியில் கலப்பதை கட்டுப்படுத்துவதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் தனித்துவமான நன்மையையும் இது கொண்டுள்ளது.” என HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.

இ-கையொப்ப மாதிரி வங்கிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வகையாகும். இதன் ஊடாக, HNB FINANCEஆனது இலங்கையின் வங்கியல்லாத நிதியியல் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்க முடியும் மற்றும் அதன் டிஜிட்டல் சேவை ஊக்குவிப்பு பணியில் ஒரு முன்னோடி நடவடிக்கையாகவும் எடுக்க முடியும்.

DocuSign சேவையானது நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல், கையொப்பமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை புத்தாக்கம் செய்துள்ளது, மேலும் இந்த செயல்முறை விரைவான சேவை வழங்கலையும் எளிதாக்குகிறது.

DocuSign Agreement Cloudஇன் ஒரு பகுதியாக, DocuSign மின் கையொப்ப வடிவமைப்பை வழங்குகிறது, இது நடைமுறையில் எங்கிருந்தும், எந்த நேரத்திலும், எந்த சாதனத்திலிருந்தும் மின்னணு முறையில் கையொப்பமிடுவதற்கான முதல் வழி.

இன்று DocuSign Agreement Cloudஆனது தினசரி செயல்முறைகளை விரைவுபடுத்தவும் வாழ்க்கையை எளிதாக்கவும் 180 நாடுகளில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களாலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles