லெபனான் மக்களுக்கு துணை நிற்கும் ஈரான்!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் நடவடிக்கை ஏமாற்று வேலை என்றும், இதனால் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் மக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் ஈரான் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஈரான் சபாநாயகரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles